skip to main | skip to sidebar

சிவப்பதிகாரம் -the left chapter

Sunday, March 9, 2008

Humans



Posted by சூரியன் at 8:49 PM 1 comment:
Newer Posts Older Posts Home
Subscribe to: Comments (Atom)

சிவந்த வானம்

உலகில் எங்கு அநீதி நடந்தாலும்
அதை கண்டு
உன் உள்ளம் கொதித்தேழுந்தால்...
நீ என் தோழனே.

- சே குவேரா

சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மனிதன்...
நீ மனிதன்.

- வைரமுத்து

என் அண்டை வீட்டு யூதனை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் யூதன் இல்லை,
என் எதிர் வீட்டு கம்யுநிஸ்டை
நாஜிக்கள் இழுத்து சென்றார்கள்
நான் கவலை படவில்லை
ஏன் என்றால் நான் கம்யுனிஸ்ட் இல்லை,
அடுத்த நாள்
என்னையும் இழுத்து சென்றார்கள்
ஏன் என்று கேட்க நாதி இல்லை.
- ஒரு ஜெர்மன் அறிஞர்.

மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை.
- மாவோ.

அரங்கேறும் அறிமுகம்

My photo
சூரியன்
வேலூர், தமிழ் நாடு, India
நியூ செஞ்சுரி புக் ஹௌஸ் இந்தியாவில் கொண்டு வந்த புத்தக புரட்சி திருவண்ணாமலையில் பள்ளி பருவத்திலேயே மார்க்சையும் tolstoy யையும் அறிமுகபடுத்தியது. இளநிலை மருந்தாக்கியலில் பட்டம் முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு தொழிற்சங்கம் மூலதனத்தை அறிமுக படுத்தி சிவந்த எண்ணங்களால் என்னை வண்ணமயமாக்கியது. என் கதை கவிதை கட்டுரைகள் என அனைத்தும் அடித்தட்டு மக்களை பற்றியதாகவே அமைந்து விடுகிறது. ஏன் என்றால் நானும் ஒரு பாட்டாளி வர்க்கம் என்ற பாசம் அன்றி வேறில்லை. இங்கு காணப்படும் அனைத்து புகை படங்களும் என்னுடைய lg rd 6230 என்ற ஒலிப்பதிவு அலைபேசியில் உள்ள vga camera மூலமே எடுக்கப்பட்டவை ஆகும்... படித்து விட்டு விமர்சனம் மட்டும் செய்யாமல் ஒரு திறன் ஆய்வாய் பதிவு செய்தால் என்னை திருத்தி கொள்ள மேலும் உதவியாய் இருக்கும்.. நன்றி வணக்கம்.
View my complete profile

Blog Archive

  • ▼  2008 (1)
    • ▼  March (1)
      • Humans
  • ►  2007 (5)
    • ►  December (5)
 

நீ நீயாக...

"அவங்களுக்கு உங்களை ஞாபகம் இருக்குமாப்பா?" சிந்துவின் குரல் என்னை பல்வேறு நினைவுகளில் இருந்து மீட்டெடுத்தது.

"கண்டிப்பா! அவளால என்ன மறக்க முடியும்னு, எனக்கு தோணல".

"எப்படிப்பா இவ்வளவு உறுதியா சொல்றீங்க?"

நிமிர்ந்து பார்த்தேன். 20 வருடங்களுக்கு முன்னால் விட்டுப் போன உறவை பற்றி எப்படி இவ்வளவு உறுதியாய் சொல்கிறாய்? என் மகளுடன் சேர்ந்து என் அறிவும் கேள்வி கேட்டது.

"ஏன்னா, ஒவ்வொரு நிமிஷமும், இந்த 20 வருஷத்தில அவல நினைக்காத நாளோ, நேரமோ இல்லமா. அதனால தான் நான் இவ்வளவு உறுதியா சொல்றேன்." சொல்லிவிட்டு, விரைந்து செல்லும் சாலையில் பார்வையை பதித்தேன். என்னைப் போலவே என் மகளும் மகிழுந்தை வேகமாக ஓட்டுகிறாள். பின் நோக்கிச் சென்ற மரங்களுடன் என் நினைவுகளும் ஓடியது.

"அப்பா, உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்பா."

"சொல்லுமா"

என் மனைவியின் காரியம் முடிந்து நண்பர்கள் புறப்பட்ட பின், என் அறைக்கு வந்த என் மகள் மெதுவாக ஆரம்பித்தாள்.

"கேட்டா, கோவிச்சுக்க மாட்டீங்களே."

"கொவிச்சுக்கிற மாதிரி கேக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்குமா."

"ரொம்ப நாளா, பார்த்துக் கிட்டு வரேம்பா. நீங்க ஏதோ ஒன்ன இழந்த மாதிரியே இருக்கீங்க. ஆரம்பத்துல அம்மாவோட உங்களுக்கு இருக்கிற பிரச்சினைன்னு நினைச்சேன். ஆனால் அது இல்லன்னு இந்த ஒரு வாரமா என் மனசு சொல்லிக்கிட்டிருக்கு."

"அத்தை பத்திரமா போய் செர்ந்துட்டாங்கலாம்மா? போன் எதாவது பண்ணாங்களா?"

"பேச்சை மாத்தாதீங்கப்பா. உங்க கஷ்டம் என்னன்னு எங்கிட்ட கூட சொல்ல கூடாதா?"

"அது முடிந்து போன கதைம்மா. அது ஒரு முற்றுப்புள்ளி. அந்த புள்ளி மேல ஒரு ஆச்சரியக் குறி தான் இருக்கு அதை வளைச்சு கேள்விக்குறி ஆக்காதம்மா."

"உங்க கஷ்டத்த எங்கிட்ட சொன்னா, நான் எதாவது செய்ய முடியுமான்னு யோசிப்பேன். எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதாம்பா."

ஒரு காலத்தில் ஒவ்வொரு நாள் முடிவிலும் நான் கூறிய வார்த்தைகள் என்னிடமே கூறிய பொழுது உறுதியாய் இருந்த நான் உடைந்து போனேன்.

"நானும் யோசிக்கிறது உண்டுமா. என் மனசில இருக்கிற பார்த்த யார்கிட்டயாவது சொல்லனும்னு. ஆனா தைரியம் இல்ல. சரி இத பத்தி பேசனும்னா இங்க வேணாம். நாம எப்பவும் போற பாலமதிக்கோ இல்ல கோட்டைக்கோ போலாமா?"

"கோட்டைக்கே போலாம்பா"

கோட்டைக்கு போகும் வரை என் நினைவுகள் மீண்டும் சுழல ஆரம்பித்தது.

பாரதி.

என் மனதில் உருவான சூறாவளி. தீரா வலி. தற்செயலாய் சந்தித்தோம். வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்ப்ரஸில், எஸ் 2 கோச்சில் என் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள். அவள் கையில் வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே. என் கையில் வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசம். சென்னையை தாண்டும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் கவனிக்கவில்லை. இரண்டு மணி நேர பயணத்தில் பரஸ்பரம் பேசிக் கொண்டோம்.

அவளுடைய கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், கோயம்பத்தூரில் பெற்றோருடனும் தன் மகளுடனும் வசித்து வருவதாகவும் அறிமுகம் செய்து கொண்டாள்.நான் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலூரில் பணியாற்றுவதையும், மனைவி மகளுடன் வசித்து வருவதாகவும் கூறினேன். பிறகு எங்கள் பேச்சு இசை, பாடல்கள், திரைப்படம், புத்தகம், ஓவியம் என்று எட்டு திக்கிலும் விரிந்தது. எதையும் விட்டு வைக்காமல் விமர்சித்து பேசித் தீர்த்தோம். முன் நாள் நிகழ்ந்திருந்த கும்பகோணம் தீ விபத்தை பற்றி பேசி அங்கு இறந்து போன குழந்தைகளுக்கு சில நேரம் மௌனமாய் இருந்து அஞ்சலி செலுத்தினோம். என்னிடம் இருந்த அழைப்புஇசைகளை (ringtone) அவளுடைய அலைபெசிக்கு அனுப்பி வைத்தேன். இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடமாய் பறந்து காட்பாடியில் இறங்கினேன். மீண்டும் சந்திக்க மாட்டோம் என்று தான் முதலில் நினைத்தேன்.

ஆனால் அவளிடமிருந்து குறுந்தகவல்கள் (sms) வர ஆரம்பித்தது. ஒரு நாள் அவளே பேசினால். பாட்டு பாடச் சொன்னால். எனக்கு பிடித்த, "தென் பாண்டிச் சீமையிலே..." என்ற பாடலை பாடினேன். பிறகு ஒவ்வொரு நாளும் அழைத்தால். பாடல், சிரிப்பு என்று காலம் வெகுவேகமாக ஓடியது. ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு மணி நேரத்திற்கு மேல் பேசினோம்.

"என்னை லவ் பன்றியாடா?"

முன்னறிவிப்பு இல்லாத தாக்குதல் கேள்வி. ஒரு நிமிட மௌனத்தை தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோணவில்லை. பிறகு சுதாரித்து,

"லவ் பண்ணா என்ன பண்ணுவ?"

"போடா பன்னி", என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள். அன்று தான் நான் வெறுமையை உணர்ந்தேன். ஆனாலும் அவளைத் தொந்திரவு செய்யும் எண்ணமில்லை. நாள் முழுவதும் என் அலைபேசியை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவளிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை.

5 நாள் கழித்து அழைப்பு வந்தது.

"சார், போன் பண்ண மாட்டீங்களோ?"

"மேடம் போன் பண்ணா போன் உடைஞ்சுடுமோ?"

"எருமை"

"தேங்க் யூ"

"ஏன்டா என்ன லவ் பண்ற? ஏன் என்னப் பிடிச்சிருக்கு?"

"இத தான் நானும் 5 நாளா யோசிச்சிகிட்டு இருந்தேன். மனசு பூரா வலி இருக்கிற ஒருத்தன், அந்த வலிக்கு மருந்து போடறவங்களை வாழ் நாள் பூரா கூடவே வச்சிக்கனுன்கிற ஆதங்கம். என் கவிதையை, என் பாடலை, என் குரல் வளத்தை உன் அளவுக்கு யாரும் விமர்சனம் செஞ்சது இல்லைடா. மேம்போக்கா நல்லா இருக்குன்னும் இல்லைன்னும் சொல்ற விமர்சனங்கள் இத்தனை நாளா எனக்கு நம்பிக்கையை தரலை. ஆனா உன்கிட்ட இருந்து வர்ற ஒவ்வொரு விமர்சனத்திலையும் ஒரு கண்டிப்பான களை எடுக்கிறப் பாங்கும், கைதட்டலோடு கருணையும் கலந்து இருக்கு. அதுக்கும் மேல உனக்கு திறமை இருக்கு நீ பெரிய ஆளா வருவேன்னு யாருமே சொன்னதில்லை. ஆனா நீ என்னை தட்டி கொடுத்த. என் திறமை மேல நீ நம்பிக்கை வச்ச."
அதனால தான்."

"ஆனா நான் கல்யானமாணவ. எனக்கு ஒரு பொண்ணும் இருக்கா. நான் குமரனை உயிருக்கு உயிரா லவ் பண்றேன்."

"தெரியும் டா. ஆனா நீ கேட்ட உடனே எனக்கு பொய் சொல்லவும் தெரியல. நீ எப்படி என்கிட்டே நீயாகவே இருக்கியோ, அது போல நானும் உன்கிட்ட நானாகவே இருக்கணும்னு ஆசை படறேன்."

"ஆனா என்னால ஒரு காதலி தர்ற எந்த சந்தோஷத்தையும் தர முடியாதுடா." "தேவை இல்லடா. ஒரு விஷயம் சொல்லட்டுமா. என் மனைவியை விட நீ ஒண்ணும் அழகு இல்ல. ஆனா உன் மனசு பூரா அன்பிருக்கு. அது மட்டும் போதும் எனக்கு. உனக்கு என்கிட்டே பேச விருப்பம் இல்லைனாலும் பரவாயில்லை. ஆனா உன்னை நான் என் வாழ்நாள் பூரா நினைச்சிகிட்டு இருப்பேன்."

கார் கோட்டைக்குள் நுழைந்ததால் என் சிந்தனை தடை பட்டது. ஜலகண்டேஸ்வரர் கோயில். பாரதி இந்த கோயிலை பற்றி பெருமையாக பேசியதும், வேலூர் வந்தால் இந்த கோயிலுக்கு கண்டிப்பாய் வருவேன் என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. கண்கள் பாரதி எங்காவது தென்படுகிறாளா என்று நோட்டம் விட்டது. மண்டபத்தில் அமர்ந்தோம். சிந்துவிடம் என் காதலை பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.

"ஏம்பா, இது அம்மாவுக்கு பண்ண துரோகமில்லையா?"

"எனக்கு, என் மனசுக்கு அந்த மாதிரி தோணவே இல்லை. ஏன்னா உங்க அம்மாவுக்கு நான் காட்டிய அன்பில ஒரு துளியை கூட குறைச்சுக்கிளை. இன்னும் சொல்ல போனா பாரதி கூட பழகிய பிறகு உங்க அம்மாவ கை நீட்டி அடிச்சது இல்ல."

"அப்புறம் ஏம்பா பிரிஞ்சிட்டீங்க. அவங்க கணவர் எதாவது பிரச்சினை பண்ணாரா?"

"இல்லமா."

"பின்ன..."

"அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தப்ப ஒரு 150000 வரைக்கும் கொடுத்து உதவினேன். அது அவளோட மனச உறுத்திகிட்டே இருந்திருக்கு, இது தெரியாம அவ விலகி போனப்ப எல்லாம் கண் மூடித்தனமா திட்டியிருக்கிறேன். அது மட்டுமில்லாம அவகிட்ட பழகுறதால நான் ஒரு நல்ல அப்பாவா உனக்கும், நல்ல கணவனா உங்க அம்மாவுக்கும் இருக்கலன்னு அவளா நினைச்சிகிட்டா. எனக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை வந்தா, அதுக்கும் காரணம் அவ தான்னு நினைச்சிகிட்டு, விலகி விலகி போனா. ஒரு நாள் ரொம்ப வெறுப்பேத்தி உண்மைய வரவழைச்சேன். அதுக்கும் மேல அவள தொந்தரவு பண்ண விரும்பல. அவளாவது சந்தோஷமா இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன். ஆனா ஒவ்வொரு ஜூலை 12 அன்னிக்கு அவளுக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டை அனுப்பிடுவேன்."

கண்கள் கலங்கியது. என் மகள் பார்க்காத வண்ணம் தூணில் இருக்கும் யாழியை நிமிர்ந்து பார்த்தேன்.

"அதுக்கப்புறம் அவங்கள எங்கேயும் போய் பாக்கலியாப்பா?"

"இல்லமா."

"இன்னும் அவங்கள காதலிக்கிறீங்களாப்பா?"

"உன் அப்பாவ பத்தி நீ என்ன நினைக்கிற?"

"முன்ன விட அதிகமா லவ் பண்றீங்கன்னு நினைக்கிறேம்பா."

அவள் முதுகை தட்டி கொடுத்து எழுந்தேன்.

"அப்பா..."

"சொல்லுமா..."

அவள் முகத்தை பார்க்காமல் பதில் அளித்தேன்.

"நீங்களும் நானும் கோவைக்கு போகலாமாப்பா, வர்ற ஜூலை 12 ஆம் தேதி?"

அதிர்ச்சியுடன் திரும்பினேன். இத்தனை வருடங்கள் என் மனதில் புதைந்து இருந்த புகை மண்டல கேள்விக்கு என் மகள் இங்கு உருவம் கொடுத்து கொண்டிருந்தாள்.

"விளையாடதடா.."

மனம் விளையாடலன்னு சொல்லு என்று எண்ணியது.

"விளையாடலப்பா, சீரியஸா தான் சொல்றேன்."

"அவளுக்கு பிரச்சினை வரும்மா."

"நீங்க கார்லயே வெயிட் பண்ணுங்க. நான் மட்டும் போய் பாத்துட்டு வந்துடுறேன். எனக்கும் அவங்கள பாக்கனும்னு ஆசையா இருக்குப்பா. சரியாப்பா..."

20 வருடங்களாய் பூட்டி வைத்த ஆசை பூதமாய் எழுந்தது. போய் தான் பார்ப்போமே என்ற ஆசையில் இதோ இன்னும் 20 கிலோ மீட்டர் தான் இருக்கிறது. கோயம்புத்தூர் நெருங்க நெருங்க எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. வந்தது தவறோ. அவளுக்கு வீணை தொந்தரவு கொடுக்க போகிறோமோ. வேண்டாம் என்று திரும்பி விடலாமா. இப்படி ஏகப்பட்ட குழப்பத்துடன் அமர்ந்திருக்கையில்...

"ஏம்பா, நீங்க கடனா கொடுத்த காசைத் திருப்பி கொடுத்துட்டாங்கலாப்பா?"

"இல்லமா"

"ஒரு வேளை, அத கொடுக்க மனசில்லாம தான், உங்கள விட்டு பிரிஞ்சா ங்களோ?"

எத்தனையோ தடவை என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி இது.

"நிச்சயமா இருக்காதுமா?"

"எப்படிப்பா, இவ்வளவு உறுதியா சொல்றீங்க?"

"அவள பத்தி எனக்கு நல்லா தெரியும்மா... நீ வேணா பாரு, என் பேர்ல பேங்க் அக்கௌன்ட் திறந்து, அதுல மாசா மாசம் ஏதாவது காசு போட்டு வந்திருப்பா.."

சிந்து என்னை ஆச்சரியமுடன் பார்த்தால்.
கோவையில் பாரதியின் வீடு இருக்கும் தெரு முனையில் காரை நிறுத்தி விட்டு சிந்து இறங்கி போனாள். என் குழந்தை மனசு காருக்குள் உட்கார அடம் பிடித்து சிந்துவுக்கு தெரியாமல் அவள் பின்னால் நடக்க செய்தது. வீட்டு வாசலில் சிந்துவை வரவேற்க வந்தாள் பார்த்து விடலாம் என்று தோன்றியது. சிந்து பாரதியின் வீட்டை நெருங்கி அழைப்பு மணியை அழுத்தினாள். சிந்துவை விட நான்கு வயது அதிகம் உள்ள பெண் ஒருத்தி வாசலருகில் வந்தாள். பாரதியின் மகளாக இருக்குமோ? பாரதியின் மகளாக தான் இருக்கும். மனது தடக் தடக் என்று வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

பத்து நிமிடம் கழித்து சிந்து வெளியே வந்தாள். அவள் முகம் சோகமாய் இருந்தது...

"என்னம்மா? என்ன ஆச்சு?"

என்னை அங்கே எதிர்பார்க்காததால், அதிர்ச்சியுடன் என்னை பார்த்து, பின்பு அடையாளம் கண்டு

"ஒன்னுமில்லப்பா"

"பாரதி எப்படி இருக்கா?"

சிறிது நேரம் மௌனமாய் இருந்து விட்டு..

"அவங்க இல்லப்பா. அவங்க இறந்து போய் நாலு மாசம் ஆயிடுச்சாம்.

மௌனமாய் நடந்தோம்.

"மேடம்"

யாரோ அழைப்பதை கேட்டு இருவரும் திரும்பினோம். பாரதியின் மகள் நின்று கொண்டிருந்தாள்...

"சொல்லுங்க..."

"உங்க பேர் சிந்து தானே..."

"ஆமா, அது எப்படி உங்களுக்கு தெரியும்? நான் சொல்லவே இல்லையே..."

"உங்கள பத்தி அம்மா நிறைய சொல்லி இருக்காங்க... அம்மா, இறக்கும் பொழுது உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க. நீங்க ஏதாவது ஒரு வருஷம் ஜூலை 12 அன்னிக்கு வருவீங்கன்னு சொன்னாங்க. உங்களையும் உங்கப்பாவையும் கேட்டதா சொல்ல சொன்னாங்க. இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க..."

எங்கள் பார்வை அவள் கையில் இருந்த பொருளுக்கு தாவியது. அவள் பிறகு பேசியது எதுவும் எங்கள் செவியில் ஏறவில்லை. பாரத ஸ்டேட் வங்கியின் வங்கி கணக்கு புத்தகம் அவள் கைகளில் இருந்தது.

நான் சிந்துவை பார்த்தேன்.
சிந்து என்னை பார்த்தாள்...

நண்பர்களின் படைப்புகள்

முற்றுபுள்ளியில் ஒரு தொடக்கம்

அந்த அழகான மாலை வேளையில் அந்த கிராமத்தில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு நடுத்தர வயதுடைய தம்பதியினரும் அவர்களுடைய ஐந்து வயது மகளும் இறங்கினர். மக்கள் அதிகம் நிரம்பியிருந்த அந்த கிராமத்தில் அவர்களை வரவேற்க காத்திருந்தது சூறாவளிக்கு பின் ஏற்படுமே அது போன்ற ஒரு மயான அமைதி.

காரில் இருந்து இறங்கிய அவர்கள் நேராக ஒரு சிறிய பழைய ஒட்டு வீட்டுக்கள் சென்றனர். அங்கு நினைவு தப்பிய நிலையில் சுமார் எழுபது வயதுடைய பெரியவர் படுத்திருந்தார். அவருடைய உதடுகளில் லேசான முனுமுனுப்பு, "டேய் வேணாம்டா, இந்த ஜாதி வெறி வேணாம்டா, அது உங்களையே அழிச்சுடும்டா."

இதை கேட்டு கொண்டிருந்த அந்த தம்பதியினரின் கண்களில் கண்ணீர். அவரின் நினைவு 12 வருஷங்களுக்கு பின்னோக்கி நகர்ந்தது.

அந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து பள்ளி படிப்பை முடித்து விட்டு பக்கத்து மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் சேர்கிறார். இது வரை ஒரு பாலர் பள்ளியில் படித்து விட்டு இரு பாலர் கல்லூரியில் சேர்ந்த பின்பும் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.

இவருடன் படித்த இவரது நண்பர்கள் காதலித்து கொண்டிருந்த போது இவர் அதில் பிடிபடாமல் இருந்தார்.

அதை பார்த்து இவரது நண்பர்கள் இவரிடம், "ஏன்டா மச்சான், நீ ஏன் பெண்களிடம் பேச மாட்டேன் என்கிறாய்?

"எனக்கு பிடிக்கலை"

ஏன் பிடிக்கலை? சரி பிடிக்கலை. அப்ப நீ லவ் பண்ணவே மாட்டியா?"

"இது வரைக்கும் தோணலை"

"ஏன்டா நீ வந்து 3 வருஷம் ஆக போகுது. இது வரைக்கும் வராத காதல் இனிமேல் தான் வரபோகுதாக்கும்."

கல்லூரி முடிந்து வேலை நிமித்தமாக வேறொரு மாவட்டத்திற்கு சென்று இரண்டு மூன்று ஆண்டுகளாகி விட்டது. பிறகு தன்னுடைய சொந்த ஊருக்கு அருகில் உள்ள நகரத்திற்கே மாற்றலாகி வந்து வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்த சமயத்தில் அவருடைய வீட்டில் திருமண பேச்சை எடுத்தார்கள். இவரோ வேண்டாம் என்று கூறினார். "ஏன்டா எதாவது பொண்ணு பாத்து வச்சிருக்கியா. காதல் கீதல் னு எதாவது பண்ணி கிட்டு இருக்கியா?" இவர் இல்லை என்று பல முறை கூறியும் வீட்டில் அவரை நம்ப யாரும் தயாராக இல்லை.

காலம் உருண்டு ஓடியது. இவர் வேலைக்கு செல்லும் சமயத்தில் தினமும் மாலை இவரது நண்பரிடம் பேசிவிட்டு வருவது வழக்கம். அன்றும் ஒரு நாள் அவருக்காக காத்திருந்தார். வழக்கமாக ஐந்து மணிக்கு வரும் நண்பர் அன்று முப்பது நிமிடங்கள் தாமதமாக வந்தார். இந்த தாமதம் இவர் வாழ்க்கையில் ஒரு சூறாவளி புயலில் சிக்கி விட போகிறது என்று தெரியாமல் இவரும் காத்திருந்தார். நண்பரிடம் பேசிவிட்டு வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏறிய அவருக்கு அது நாள் வரை நின்று கொண்டு பயணம் செய்த அவருக்கு அன்று ஜன்னல் ஓர இருக்கை கிடைத்தது. அவருடன் விதியும் சேர்ந்து ஏறி அவர் பக்கத்தில் கர்சிப் போட்டு இடம் பிடித்தது.

பேருந்து அடுத்த நிறுத்தத்தில் நின்ற போது அதில் ஒரு பெண் ஏறினாள். அவளை பார்த்த மாத்திரத்தில் இவருள் ஒரு சிறு புன்னகை, ஒரு சந்தோஷம். அது நாள் வரை பெண்களை பார்த்தாலே விலகி விலகி சென்று கொண்டிருந்த அவரது பார்வை மீண்டும் மீண்டும் அவள் மீதே திரும்பியது. இந்த நேரத்தில் பேருந்தினுள் கூட்டம் அதிகமாக அந்த பெண் இவர் அருகில் வந்தால். மற்றவர்களை விட்டு விட்டு இவரிடம் தன்னுடைய புத்தக பையை தந்தாள்.

உலகத்தையே இவர் கையில் கொடுத்தது போல் இவர் ஆனந்தம் அடைந்தார். விதி காலடியில் உக்கார்ந்து கை கொட்டி சிரித்தது.

இரவு உணவை முடித்து விட்டு தூக்கம் வராமல் படுத்து கொண்டிருந்த பொழுது அன்று மாலை பேருந்தில் நடந்தவற்றை அசை போட்டு பார்த்து கொண்டிருந்தார். இவருடைய புத்தி இது உனக்கு தேவையா என்று கேள்விகளால் தூக்கத்தை கெடுத்து கொண்டிருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து இனிமேல் இது போல் நடக்காமல் பார்த்து கொள்ளலாம் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு உறங்கினார்.

மறு நாள் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்ப பேருந்து நிலையம் வந்தவருடைய கால்கள் தானாக நேற்று ஏறிய அதே பேருந்தில் ஏறியது. ஆனால் இவருடைய புத்தியோ இறங்கிடுடா என்றும், மனம் கிளம்புடா என்றும் போட்டி போட்டு சாகடித்தது. கடைசியில் மனம் வெல்ல பேருந்தும் கிளம்பியது. பேருந்து கிளம்பிய வேகத்தில் இவருடைய பதட்டமும் கிளம்பி விட்டது. அடுத்த கல்லூரி பேருந்து நிறுத்தம் வருவதற்குள் இவருடைய மனம் அவள் வருவாளா? மாட்டாளா? பேருந்து அந்த நிறுத்தத்தில் நிற்குமா? ஒரு வேலை அவள் ஏறினாலும் தன் அருகில் வருவாளா? தன்னை பார்ப்பாளா? போன்ற ஆயிரம் கேள்விகள் அவரை முற்றுகை இட்டு பாடாய் படுத்தியது. பேருந்து நிறுத்தம் வந்தது. பேருந்தும் நின்றது. அவளும் ஏறினாள். அருகில் வந்தால். அனைத்து கேள்விகளுக்கும் பதில் வந்தது கூடவே இலவச இணைப்பாக அவளது புன்சிரிப்பும் கிடைத்தது. தன்னுடைய புத்தக பையை நேற்று போலவே இன்றும் அவரிடம் கொடுத்து விட்டு அவர் மனதில் ஏறி அமர்ந்தாள். அந்த நாள் வரை உலகத்தை இயந்திர தனமாக பார்த்து கொண்டிருந்த அவரது பார்வையில் இப்போதைய உலகம் புதிதாக தெரிந்தது. முதல் முறையாக உலகத்தை ரசிக்க தொடங்கினார். மனிதர்களை நேசிக்க தொடங்கினார்.

அது வரை விரோதிகளாக தெரிந்த நடத்துனரும் ஓட்டுனரும் நண்பர்களாக உறுமாறினர். உள்ளூர் காரர்களோ விரோதிகள் ஆனார்கள். இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தால் அருகில் யாராவது அமர்ந்து தொல்லை கொடுப்பார்கள் என்று நடத்துனரின் இருக்கையை பட்டா போட்டார். அது வரை மாலையில் மட்டுமே பார்த்து கொண்டிருந்தவர் காலையில் அவள் பயணிக்கும் பேருந்தையே வழி துணை ஆக்கினார்.

ஒரு நாள் இவருக்கு அருகில் ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஐயா பெரியவரே, வழியில் நிற்காதீர்கள் உள்ளே தள்ளி சென்று நில்லுங்கள் என்றார். அதற்கு அவர் நான் இங்கு நிற்பதால் உனக்கு என்னப்பா சிரமம் என்று நக்கலாக கேட்டார். இல்லை சாமி போகும் வழியில் நிறைய கூட்டம் ஏறும் உங்களுக்கு தான் சிரமம் என்று கூறினார். ஒ பொதுநலமா சொல்லியிருக்கீங்களா, நான் நீங்க எதோ சுயநலமா சொல்லியிருபீங்களோன்னு தப்ப நினைசிட்டேன்னு கூறி உள்ளே சென்றார். காதலி தன் அருகில் நிற்க முடியாதே என்ற இவருடைய ஆதங்க சுயநலம் பொதுநலத்தில் மறைந்து போனது.

ஒரு நாள் அவளை பார்க்கவில்லை என்றாலும் அடுத்த நிமிடம் சாக போகும் மரண வலியில் அவதிப்பட்டார். ஒரு நாள் அவளிடம் சென்று காதலை வெளிபடுத்தினார். சிரிப்பால் சம்மதம் தெரிவித்தாள் அவள். உலகத்தையே உள்ளங்கையில் தாங்குவது போன்ற ஆனந்தம் இவருக்கு.

இவ்வாறு சென்று கொண்டிருந்த இவர்களின் கனவை முதல் அலாரம் அடித்து மெதுவாய் கலைத்தது. இவர்களின் பழக்கத்தை பார்த்த இவரது நெருங்கிய உறவும் பங்காளியுமான முற்போக்குவாதி இதை பற்றி விசாரித்தார். இவருடைய முழு கதையையும் கேட்டு விட்டு

"பொண்ணு நம்ம சாதின்னா எந்த பிரச்சினையும் இருக்காது! அப்படி இல்லனா வெட்டு குத்துன்னு கிளம்பிடுவானுங்கடா." என்று எச்சரித்தார்.

இதை கேட்டவுடன் கோபத்துடன், "ஏன் பங்காளி வேற ஜாதி பெண்ணை காதலிக்க கூடாதா? திருமணம் செய்ய கூடாதா?" என்று கேட்டார்.

" நாம என்னடா பண்றது. நம்ம பாழா போன கலாச்சாரத்தில நம்ம பெத்தவங்க ஜாதிய உயிர் மூச்சா நினைச்சிகிட்டு இருக்காங்க. அதை ஒரு வறட்டு கவ்ரவமா நினைச்சு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அந்த கலாச்சாரத்தில இருந்து வெளியே வர முடியாமலும் உள்ள போக முடியாமலும் தினறிகிட்டு இருக்கிறோம்," என்றார்.

அப்பொழுது தான் இவருக்கு தன் காதலின் பிரச்சினையும் பிரச்சினையின் ஆழமும் தெரிய வந்தது. இதை எல்லாம் நினைத்து மனம் தளராமல் ஆழ்கடலில் தான் முத்து கிடைக்கும் என்று முன்னை விட தீவிரமாய் செயலில் இறங்கினார். இரண்டு வருடங்கள் அமைதியாய் போய் கொண்டிருந்த இவரது வாழ்க்கை ஓடை, ஊருக்கு தெரிந்து காட்டாறாய் கிளம்பியது.

அது வரை மாமனாய், மச்சானாய், பங்காளியாய், நண்பனாய், தாயாய், பிள்ளையாய், பல தலைமுறைகளாய் ஜாதி வேறுபாட்டை புதைத்து வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் உண்மை முகம் ஜாதி வெறியாய் வெளிப்பட்டது. இரு ஜாதிகாரர்களையும் பஞ்சாயத்தில் நிறுத்தியது. ஆனால் இவ்வளவு பிரச்சினையிலும் இவர்கள் இருவரும் தங்கள் காதலில் உறுதியுடன் நின்றனர். அதன் விளைவு இரு தரப்புக்கும் மோதல் பெரிதானது.

இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாய் ஜாதி வெறிக்கு எதிராய் ஒரு வயோதிக குரல் மட்டுமே ஒலித்தது. "வேணாம்டா இந்த ஜாதி வெறி, இத்தனை நாளாய் தாயாய் பிள்ளையாய் பழகிட்டு ஏன்டா இப்படி அடிச்சுக்கிறீங்க. இந்த ஜாதி வெறி உங்களை மட்டுமில்ல உங்க சந்ததியையும் பாதிக்கும்", என்றார். ஆனால் அந்த பெரியவரை ஒரு பொருட்டாகவே மதிக்காததால் காதலர்கள் வேறு ஊர் சென்று திருமணம் செய்து கொண்டனர்.

பல ஆண்டுகள் கழித்து இதோ இப்பொழுது தங்கள் குழந்தையுடன் காலடி எடுத்து வைக்கும் போதும் அந்த ஜாதி வெறி அணையாமல் இன்னும் கணன்று கொண்டே இருந்தது.

அந்த பெரியவரின் உயிர் அவர் உடலில் ஒட்டியிருப்பது போலவே அவரது உதடுகளில் ஜாதி வெறிக்கு எதிரான வார்த்தைகளும் ஒட்டி கொண்டிருந்தது. பெரியவரின் உயிர் பிரிந்து மவுனமாய் தம்பதியர் வெளியே வந்தனர்.

"அப்பா சாதின்னா என்னப்பா?"

குழந்தையின் கேள்வி தம்பதியினரின் கண்களில் எதையோ இழந்த ஏக்கத்தையும், எவ்வளவோ வென்ற சந்தோஷத்தையும் கொண்டு வந்தது.

அந்த ஒரு நிமிட முடிவு; ஒரு கேள்வியில் ஆயிரம் பதில்கள்.

-சரவணன்